ஒரு நபர் யாருடன் வேண்டுமானாலும் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளட்டும். அது அவருடைய விருப்பம். சுதந்திரம். அதில் தலையிடுவதும், கருத்துக்கூறுவதும் அசிங்கமான காரியம்.
ஆனால் அந்த நபர் எங்களைத் தலைமைதாங்கவென்று வருகின்ற போது, அந்த நபர் யார், அவரது குணாதிசயங்கள் என்ன, எங்களது நிலைப்பாடுகளோடு அந்த நபரின் எண்ணங்கள் ஒத்துப்போகின்றனவா – போன்ற விடயங்களை அலசி ஆராய்வது ஒரு இனத்தின் கடமை.
குறிப்பிட்ட இந்தப் புகைப்படத்தில் உள்ள அம்மணி; தமிழரசுக் கட்சியில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள ஒருவர்.
அதாவது உங்களையும் என்னையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடாளுமன்றம் மாத்திரமல்ல, உலகம் முழுவதும் வலம்வரஇருக்கின்ற ஒருவர்.
என்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் யார், இவரது கொள்கை என்ன என்பதை ஆராய்ந்து அறியும் உரிமையும், கடமையும் எனக்கு இருக்கின்றது. ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்றது.
இந்த அம்மணி சில பிரமுகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து, தனது சமூகவலைத்தளங்களில் பெருமையாகப் பதிவிட்டுள்ளார்.
அம்மணி ஓடிச்சென்று நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த நபர்களில் ஒருவரது புகைப்படத்தைப் பார்க்கின்றபோது அது செயற்பாட்டாளர் அருன் சித்தாத் போன்று தெரிகின்றது. அருண் சித்தார்த்தின் கொள்கைகளை நாங்கள் இங்கு விமர்சிக்க விரும்பவில்லை – அது அவரது உரிமை. ஆனால் அருண் சித்தார்த் நிச்சயம் ஒரு தமிழ் தேசியவாதி அல்ல. அவர் தமிழ் தேசியத்துக்கு முற்றிலும் எதிரானவர்.
அதேபோன்று அநுரவும் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளாதவர் என்றே நம்புகின்றோம்.
அம்மணி அடித்துப் பிடித்துக்கொண்டு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ள சுமந்திரனும், தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் தேசியத்துக்கு விரோதமாகச் செயற்படுகின்ற ஒருவர் என்று குற்றம்சுமத்தப்படுபவர்.
ஆக, அம்மணியின் அரசியல் புரிதலும், நிலைப்பாடும் தெளிவாகத் தெரிகின்றது.
எமது பிரதிநிதியாக சுமந்திரனால் களமிறக்கப்பட்டுள்ள இந்த அம்மணி யார், அவரது கொள்கை என்ன, தமிழ் தேசியம் சார்ந்த அவரது நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதற்காகவே இந்தப் பதிவு.
(கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்று வாக்குகளை மூன்று வெவ்வேறு கொள்கைகளுக்குப் போட்டுவிட்டு வெட்கமே இல்லாமல் ஊடகங்களில் வந்து முக்கி முக்கிச் செவ்விகொடுத்த தலைவரின் கட்சிதானே தமிழரசுக் கட்சி. எனவே தமிழரசுக் கட்சியில் வேட்பாளராகக் களமிறங்கும் அனைத்துத் தகுதியும் அம்மணிக்கு இருக்கின்றது.
வாழ்க அம்மணி.. வாழ்க தமிழரசுக் கட்சி.. வாழ்க தமிழ் மக்கள்..