சமீபத்திய மாதங்களில் சுமார் ஆறு இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா மற்றும் லெபனானில் நீடித்த போர்களால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல்களே அதற்கு முதன்மைக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தியோகபூர்வ புள்ளிவிவரம்
எனினும், மன உளைச்சலுகுக்கு உள்ளாகி உயிரை மாய்த்துக் கொண்ட இஸ்ரேலிய வீரர்களின் உண்மையான எண்ணிக்கை இதனை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அத்தோடு, இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பதாக உறுதியளித்த போதிலும் இஸ்ரேலிய இராணுவம் இன்னும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை.
ஆயிரக்கணக்கானவர்கள் பாதிப்பு
இந்த நிலையில், மன உளைச்சலுக்கு உள்ளான ஆயிரக்கணக்கான வீரர்கள் இராணுவ மனநல மருத்துவமனைகள் மற்றும் உளவியலாளர்களின் உதவியை நாடியுள்ளதாக தெரிக்கப்படுகிறது.
இவ்வாறு உளவியல் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை போரில் உடல் காயங்களுக்கு உள்ளானவர்களை விட அதிகமாக இருக்கலாம் என்று மேலும் குறிப்பிடப்படுகிறது.