முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானிய வான்வழிப் போக்குவரத்து கோளாறு: ஜெர்மனிக்கு திருப்பிவிடப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செப்டெம்பர் 8ஆம் திகதி நாட்டின் 1,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பெரும் தாமதங்கள் மற்றும் விமானங்கள் இரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தடங்கலின் காரணமாக, கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL503 விமானம், ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

விமானப் போக்குவரத்தைச் செயல்படுத்தும் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, உள்ளூர் நேரப்படி மாலை 4.40 மணியளவில் சரிசெய்யப்பட்டதாக பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையம்  தெரிவித்துள்ளது.

எனினும், கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னரும் விமானங்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் உரிய இடங்களில் இல்லாத காரணத்தால், மேலும் சில காலம் விமான சேவைகளில் தாமதங்கள் தொடரும் என விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இதனிடையே, ஏற்பட்ட பாரிய விமானப் போக்குவரத்து தடங்கலுக்கு பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையம்  மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாக முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரித்தானிய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையான UK CAA உத்தரவிட்டுள்ளது.

Source: https://samugammedia.com/british-air-traffic-disruption-srilankan-plane-sent-back-to-germany-1788928253

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்