2019 ஆம் ஆண்டு கோட்டபாய ராஜபக்ச, இனவாதத்தைப்பற்றி பேசி
மக்கள் மத்தியில் எவ்வாறு வாக்கு சேகரித்தாரோ அதுபோல தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார
திஸாநாயக்கவும் மக்கள் மத்தியில் இனவாதத்தை பற்றி பேசியே வாக்கு
சேகரிக்கின்றார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான
வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நானு ஒயா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு
கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு
தேர்தலிலும் முக்கிய பங்கை வகித்தது இந்த ஈஸ்டர் தாக்குதல் அந்த ஈஸ்டர்
தாக்குதல் பிரச்சினையை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
தற்போதய ஜனாதிபதி
தற்போது நியமிக்கப்பட்டுள்ள
செயலாளர்கள் அனைவரும் ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என கம்பன்பில
அறிவித்திருந்தார் தற்போது இது ஒரு புது கதையாக இருக்கிறது இரண்டு தேர்தலிலும்
இந்த இரண்டு ஜனாதிபதிகளும் இதனை பயன்படுத்தியே வந்துள்ளனர்.
நாம் தற்போதய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முலுபலத்தையும்
வழங்கினால் அவர் நினைத்ததை வைத்து செயல்படுவார் ஆகவே ஜக்கிய மக்கள் சக்தியின்
தலைவர் சஜித்பிரேமதாச இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கு செயற்பட
வேண்டும்.
தற்போதய அரசாங்கம் மக்கள் மத்தியில் சொன்னவற்றை எதையும் செய்ததில்லை 48
மணித்தியாலங்களில் திருடர்களை கைது செய்வதாக கூறினார்கள் தம்மிடம் ஆதாரங்கள்
இருப்பதாக கூறினார்கள் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை அநுரவிற்கே தெரியாது அவர் ஜனாதிபதியாக வருவார் என்று.
அரிசிக்கு தட்டுபாடு
இன்று அரிசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை
1700 ரூபாய் என கூறியவர்கள் இன்று 1350 ரூபாயில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
பொருட்களின் விலை அதிகரித்துள்ளது தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில்
தீபாவளி முற்பணம் எவ்வளவு என்பதனை பெருந்தோட்ட நிறுவனங்கள் இதுவரை
அறிவிக்கவில்லை.
ஒருகாலத்தில் EPF பணத்தை யானை விழுங்கிவிட்டதாக கடந்த அரசாங்கத்தில் ரணிலுக்கு
ஆதரவு வங்கியபோது கூறியவர்கள் மீண்டும் அந்த யானையை கொண்டு வந்துள்ளார்கள் ஆகவே
தாம் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.