விக்னேஷ் சிவன்
நடிகர் சிம்புவின் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான படம் போடா போடி. இப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் விக்னேஷ் சிவன்.
முதல் படமே அவருக்கு ஒரு பெயர் பெற்றுக் கொடுத்தாலும் அவர் மிகவும் பிரபலம் ஆனது நானும் ரவுடிதான் படம் மூலம் தான்.
அதன்பின் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் இயக்கியவர் கடைசியாக 2022ம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தான், அப்படமும் பிளாக் பஸ்டர் ஹிட் தான்.


நாளுக்கு நாள் தாறுமாறான வசூல் வேட்டையில் சிவகார்த்திகேயனின் அமரன்… மொத்த கலெக்ஷன்
இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகராக, பாடலாசிரியராகவும் வலம் வருகிறார்.
சொத்து மதிப்பு
ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கும் விக்னேஷ் சிவன் பாடல்கள் எழுத ஒரு பாட்டுக்கு ரூ. 3 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம்.
தனது மனைவி நயன்தாராவுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார். மொத்தமாக இவரது சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.


