புதிய இணைப்பு
பிரித்தானியாவில் (United Kingdom) தமிழர்களின் பங்களிப்பு பாரியளவில் காணப்படுவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) சுட்டிக்காட்டியுள்ளார்.
தைத்திருநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல்
அத்தோடு, முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் (Uma Kumaran) தொடர்பில் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த உமா குமரன், ஐ.நா பொறிமுறைகளை இலங்கை தொடர்ந்தும் நிராகரித்து வருவதால் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வெளியுறவு விவகார குழுவின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐ.சி.சி) குறிப்பிடுமாறு வெளியுறவு செயலாளர் டேவிட் லம்மிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமிழர்கள் வாழ்வில் பெரும் பண்பாட்டு நிகழ்வான தமிழர் மரபு திங்கள் விழா
லண்டனில் கடந்த ஞாயிறு (19/01/2025) அன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இயற்கையை தெய்வமாக வழிபடும் தமிழர்கள் அந்த இயற்கைக்கு நன்றி கூறி விழா
எடுப்பதுடன் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பையும் கொண்டாடும் இந்த தை
மாதத்தில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைத்திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் பிரித்தானியாவில் பல பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் தம்
அடையாளங்களின் வழி பயணிக்கவும் தம் அடையாளங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு
சேர்ப்பதற்கும் தமிழ் மரபு திங்கள் நிகழ்வுகளை பல்வேறு பகுதிகளில் கொண்டாடி
வருகின்றனர்.
பறை முழங்க மங்கள வாத்தியங்கள்
இந்நிலையில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம் (TCC)
மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD) ஆகியன இணைந்து தமிழ் மரபுத் திங்கள்
நிகழ்வினை இன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் நியூ மோல்டன் பகுதியில்
கோலாகலமாக கொண்டாடினர்.

தமிழர்களின் வீர இசை பறை முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க மற்றும் மயிலாட்டம்
குதிரையாட்டம் புலியாட்டம் கரகாட்டம் என தமிழர்களின் கண்கவர் கலைகளுடன்
நிகழ்வின் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு தமிழர்களின்
பல்வேறு கலை பாரம்பரிய நிகழ்வுகளுடன் மரபுத் திங்கள் நிகழ்வுகள் கோலாகலமாக
இடம்பெற்றது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
Source: https://ibctamil.com/article/uk-prime-minister-keir-starmer-celebrates-pongal-1737477147

