அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், தனது முதல் உரையில் அதிரடியான அறிவிப்புகளால் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.
அந்த வகையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் அமெரிக்காவின் (United States) தற்போதைய புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் 47ஆம் ஜனாதிபதியாக ட்ரம்ப் நேற்யை தினம் (21.01.2025) வொஷிங்டனில் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டடத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு
மேலும் கோவிட் தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை உலகளாவிய சுகாதார அமைப்பு தவறாகக் கையாண்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது 12 மாதங்களில் ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதுடன் அதன் பணிக்கான அனைத்து நிதி பங்களிப்புகளையும் நிறுத்துவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
WHO இன் மிகப்பெரிய நிதி ஆதரவாளராக அமெரிக்கா உள்ளதுடன் அதன் மொத்த நிதியில் 18% அமெரிக்காவினுடையதென்பதும் குறிப்பிடத்தக்கது.