முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மிக் போர் விமான கொள்முதல் விசாரணை; கோட்டாபய ராஜபக்ஷ FCID இல் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். 

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று முற்பகல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.

அங்கு ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னர்  நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியிருந்தார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது, அதாவது 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உக்ரைன் நாட்டில் இருந்து இலங்கை விமானப்படைக்காக மிக்-27 (MiG-27) ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடு செய்யப்பட்டதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. 

இந்த நிலையில், குறித்த கொடுக்கல்வாங்கல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.  

Source: https://samugammedia.com/major-arms-purchase-investigation-gotabaya-rajapaksa-appears-at-fcid-1789100819

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்