முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை: பொதுமக்கள் பாதிப்பு

கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் நடவடிக்கை தற்போது நடைமுறையில் இல்லாததால் யாழ்ப்பாணத்தில் (Jaffna) மக்கள் அதிக இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

அந்தவகையில், உரும்பிராய் தபால் நிலையத்திற்குள் நாய் ஒன்று உள்நுழைந்து படுத்திருந்த நிலையில் நாயை விரட்டுவதற்கு ஊழியர்கள் தவறிவிட்டதால் அங்கு சேவைகளை பெறுவதற்கு சென்றவர்கள் அச்சத்தில் காணப்பட்டுள்ளனர்.

தெருநாய் கடி மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் பதிவாகி இருந்தன.

இருப்பினும் உரிய தரப்புகள் அவற்றில் அக்கறை செலுத்துவதை அவதானிக்க முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கட்டாக்காலி நாய்கள்

மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் வீதிகளில் பயணம் செய்யும்போது போது கட்டாக்காலி நாய்கள் அவர்களை துரத்திச் செல்லவும், கடிக்கவும் செய்கின்றது.

யாழில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை: பொதுமக்கள் பாதிப்பு | Dog Enters Post Office Causes Panic In Jaffna

அல்லது வாகனங்களுக்கு குறுக்கே வந்தே விழுவதாலும், வீதியில் செல்பவர்களை துரத்தி செல்லும்போதும் அவர்கள் பயத்தின் மத்தியில் வாகனங்களை செலுத்தும் நிதானத்தை இழந்து விபத்துக்கள் கூட சம்பவித்தவண்ணம் உள்ளன.

கோப்பாய், நீர்வேலி பகுதிகளில் வீதிகளில் நாய்கள் குறுக்கே ஓடியதால் கடந்த மூன்று நாட்களில் மூன்று பேர் விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வீதி, கோப்பாய் பூதர்மடத்துக்கு அருகாமையில் நேற்று (21) மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் நாய் குறுக்கே ஓடிய தால் நிலை தடுமாறி நாயுடன் மோதி கீழே வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

மக்கள் விசனம்

இந்த கட்டாக்காலி நாய்களை பிடிப்பதற்கான பொறிமுறை தற்போது நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

யாழில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை: பொதுமக்கள் பாதிப்பு | Dog Enters Post Office Causes Panic In Jaffna

எனவே உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி கட்டாக்காலி நாய்களை குறைக்கும் அல்லது இல்லாது செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து, வீதிகளில் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக காணப்படுகின்றது.

இதேவேளை, வைத்தியசாலைகளில் நாய் கடிக்கு உள்ளாகி செல்பவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சுமத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள்: கஜிந்தன்

GalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/dog-enters-post-office-causes-panic-in-jaffna-1729588516

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.