முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் ‘டித்வா’ போன்ற மற்றொரு பேரழிவு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை

அரசமைப்பின் 22 ஆவது திருத்தமானது ‘டித்வா’ போன்றே மற்றொரு பாரதூரமான பேரழிவாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதன் மூலம் ஜனநாயகத்துக்கு மரண அடி கொடுக்க அரசு செயற்பட்டு வருகின்றது என்றும்  குற்றம் சாட்டினார்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்கத்துடன் வத்தளை மொனார்க் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“22 ஆவது திருத்தத்தின் ஊடாக சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமையாக்கும் பெரும் சதித்திட்டம் இதுவாகும்.

இது ஜனநாயகத்தைச் சுருக்கி, நாட்டில் தனிக்கட்சி ஆட்சி முறையை உருவாக்கும் செயற்பாடாகும்.

நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிக்க முற்படும் இந்த முயற்சியைத் தோற்கடிக்காவிட்டால், மக்கள் சுதந்திரமாக அரசியல் செய்யவோ கருத்துக்களைத் தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும்.

தனிநபர் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வுச் சமன்பாடுகளைப் பாதுகாக்க வேண்டும்.

எல் நினோ மற்றும் லா நினோ நிலைமைகள் காரணமாக வறட்சி, வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய அனர்த்த முகாமைத்துவ பொறிமுறைகள் காலாவதியாகிவிட்டன. பேரழிவுகள் ஏற்படுவதற்கு முன்னரே தாக்கங்களைக் குறைக்கும் புதிய வேலைத்திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.” – என்றார்.

Source: https://samugammedia.com/22nd-amendment-of-the-constitution-ditwa-is-like-another-genocide—opposition-leader-sajith-warns-1789640846

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.