முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்முனையில் காலாவதியான பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பறிமுதல்

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தக நிலையத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து நேற்று முன்தினம் (16) முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனையடுத்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீனின் அவசர உத்தரவுக்கமைய, பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லபீர் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறித்த வர்த்தக நிலையத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வகையில், காலாவதி திகதி முடிவடைந்த பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து, குறித்த உணவுப் பொருட்கள் அனைத்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறி செயற்பட்டதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றின் உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகளை அவதானமாக பரிசோதிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/a-large-quantity-of-expired-food-items-was-seized-at-the-customs-checkpoint-1789709964

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.