முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கேப்பாபுலவில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை – மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பம்

முல்லைத்தீவு – கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு பகுதியில் நேற்று (19) இரவு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை, வீட்டு யன்னல்களை உடைத்ததுடன், வீட்டினுள் இருந்த அரிசிப் பைகளையும் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

குறித்த வீட்டில் வயோதிப குடும்பம் வசித்து வந்த நிலையில், காட்டு யானை வீட்டிற்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியபோது அவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

இதன்போது வீட்டின் வளாகத்தில் இருந்த பயன்தரும் மரங்களையும் காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது.

மேலும், அப்பகுதியிலுள்ள ஏனைய வீடுகளின் வளாகங்களுக்குள்ளும் புகுந்த காட்டு யானை, தென்னை உள்ளிட்ட பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்துகொண்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா. யூட்சன், சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார்.

குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் தொடர்ச்சியாக புகுந்து வருவதால், மக்களின் வீடுகள், பயன்தரும் மரங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களின் உயிர்கள் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் வகையில் யானை வேலிகளை அமைத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தித் தருமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/a-wild-elephant-enters-a-residential-area-in-keppapul–family-escapes-with-just-hair-raising-close-call-1789887882

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.