நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ கொழும்பு ஊடகமொன்றிடம் இதனைத் தெரிவித்தார்.
நுவரெலியா பாடசாலைகளுக்கான அறிவிப்பு
இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்தில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவதில் சிரமம் காணப்படுமாயின், அது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு வழங்கியுள்ளார்.

இதற்கமைய, சம்பந்தப்பட்ட பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை உரிய பாடசாலை அதிபர்களே மேற்கொள்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: https://ibctamil.com/article/inclement-weather-decision-regarding-schools-1789916110

