முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட நாமல்! மீண்டும் சிறை

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (23) ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையின் சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த வழக்கின் மேலதிக விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஷ இன்று (23) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது, அவரை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எயார்பஸ் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் பணப்பரிமாற்றங்கள் தொடர்பில்இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு  விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

Source: https://samugammedia.com/namal-was-brought-to-court-with-heavy-security-back-to-prison-again-1790153810

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.