முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

8 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம்: வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருமானம் 12.01 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 11.52 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.26 சதவீத அதிகரிப்பாகும்.

ஏற்றுமதி வருமானம்

இந்த காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரு ஏற்றுமதித் துறைகளிலும் வளர்ச்சி பதிவாகியுள்ளது.

8 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம்: வெளியாகிய மகிழ்ச்சி தகவல் | Sri Lanka S Export Earnings 2026 Past 8 Month

பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 3.63 சதவீதம் அதிகரித்து 9.41 பில்லியன் டொலர்களாகவும், சேவைகள் ஏற்றுமதி வருமானம் 6.59 சதவீதம் அதிகரித்து 2.60 பில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

இதனிடையே, 2026 ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் மொத்த ஏற்றுமதி வருமானம் 1.60 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.77 சதவீத வளர்ச்சியாகும்.

ஆகஸ்ட் மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி வருமானம் 13.97 சதவீதம் அதிகரித்து 331.87 மில்லியன் டொலர்களாகவும், பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1.27 பில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கும், தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்றுமதித் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் இந்த வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/sri-lanka-s-export-earnings-2026-past-8-month-1790157592

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.