முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெடுக்குநாறிமலையில் வழிபாட்டுக்கு தடை கோரிய பொலிஸார் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெடுக்குநாறிமலையில் இரு தரப்பினர் ஒரே நேரத்தில் வழிபடுவதால் அமைதிச் சீர்குலைவு ஏற்படும் எனக் கூறி நெடுங்கேணி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை வவுனியா நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. 

மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் பொலிஸாருக்கு நீதவான் கடுமையாக அறிவுறுத்தினார்.

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் சனிக்கிழமை வட மாகாண தலைமைத் தேரர் சாந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநாளில் சைவ மக்களும் புரட்டாதிச் சனிக்கிழமை விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் இரு தரப்பும் வழிபாடுகளில் ஈடுபடுவதால் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் எனக் கூறி பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், ஆலய நிர்வாகத்தினரும் பௌத்த தேரர் தரப்பும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

வழக்கு விசாரணையின் போது, வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான சுதந்திரத்திற்குத் தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதை ஆலய நிர்வாகம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான், சட்டம் மீறப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே பொலிஸார் நீதிமன்றத்தை அணுக வேண்டுமே தவிர, வீணாக நீதிமன்ற நேரத்தை விரயம் செய்யக் கூடாது எனக் கூறி பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.

Source: https://samugammedia.com/police-who-tried-to-block-worship-on-vettukunarimalai–court-issues-strict-order-1790321000

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்