முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அச்சுவேலி சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் – 4 சிறுவர்கள் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்கள் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நான்கு சிறுவர்களை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காணொளியில் சிறுவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு, சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, அந்த காணொளியில் உள்ள உத்தியோகத்தர் அங்கு கடமையில் இருப்பவர் என நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார், நான்கு சிறுவர்களை நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/incident-of-brutally-attacking-kids-at-achchuveli-reform-school—4-kids-arrested-1790327590

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்