குரங்குகள், மயில்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களில் இருந்து விவசாயிகளின் விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில், 76 விவசாயிகளுக்கு Air Gun-களை வழங்கும் நிகழ்வு அண்மையில் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் திட்டம் – 2026” கீழ், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த Air Gun-கள் 50 சதவீத மானிய அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட விவசாய பணிப்பாளர் தரங்கிகா ஷியாமலி, கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் அருந்ததி வாசனா ஜயசுந்தர, கருவலகஸ்வெவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, Air Gun-களை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பயனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

