முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட்டியின் இறப்பை தாங்க முடியாமல் அதன் உடலை தலையில் வைத்து நீந்திய தாய் திமிங்கிலம்

தனது குட்டி இறந்த வலியை தாங்க முடியாமல் அதன் இறந்த உடலை தலையில் வைத்துக்கொண்டு நீந்திய திமிங்கலம் குறித்த செய்தியை இன்று (03) வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

டெல்குவா என அழைக்கப்படும் இந்த தாய் திமிங்கலத்தின் குட்டி புத்தாண்டு தினத்தன்று உயிரிழந்ததாகவும், தனது குட்டியைக் காப்பாற்றும் நோக்கில் நேற்று முன்தினம் (01) முதல் தனது குட்டியை தலையில் சுமந்துகொண்டு நீந்துவதாகவும் வோஷிங்டனில் உள்ள திமிங்கல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 20ம் திகதி டெல்குவாவை அதன் குட்டியுடன் முதன்முதலாக அவதானித்ததாகவும், அப்போது குட்டி உயிருடன் இருந்ததாகவும் திமிங்கல ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 இறந்த குட்டியை தலையால் தள்ளி நீந்திக் கொண்டிருந்தது

ஆனால் நேற்று முன்தினம் (01) தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் ஆராய்ச்சியாளர்கள் டெல்குவா தனது குட்டியின் இறந்த உடலை தலையில் வைத்துக்கொண்டு சியாட்டில் கடலில் நீந்துவதை புகைப்படம் எடுத்ததாக திமிங்கல ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

டெல்குவா இறந்த குட்டியை தலையால் தள்ளி நீந்திக் கொண்டிருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி விஞ்ஞானி பிராட் ஹான்சன் தெரிவித்தார்.

குட்டியின் சடலம் நீரில் மூழ்கும் போது, ​​கடலில் மூழ்கி இறந்த தனது குட்டியின் உடலை மீண்டும் கடலின் மேற்பரப்பிற்கு கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

2018 ஆம் ஆண்டிலும், ஒரு குட்டியை இழந்தது

டெல்குவா தனது குட்டியை தலையில் வைத்துக்கொண்டு நீந்துவதை துக்கத்தின் அடையாளமாக அவர் சுட்டிக்காட்டினார்.

குட்டியின் இறப்பை தாங்க முடியாமல் அதன் உடலை தலையில் வைத்து நீந்திய தாய் திமிங்கிலம் | A Mother Whale Carrying Her Babys Grief

முன்னதாக 2018 ஆம் ஆண்டிலும், டெல்குவா ஒரு குட்டியை இழந்ததாகவும், அந்த நேரத்தில் அது தொடர்ந்து 17 நாட்கள் குட்டியின் உடலைத் தலையால் தள்ளி சுமார் 1000 கிலோமீட்டர் நீந்தியதாகவும் அவர் கூறினார்.

தனது குட்டியின் இறந்த உடலுடன் நீந்திய காட்சியைப் பார்த்த பல விலங்கியல் வல்லுநர்கள் அதனது தாய்வழி பாசத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறினார். 

https://www.youtube.com/embed/dHcXZHnUAHo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.