ஐஸ்வர்யா ராய்
உலக அழகி பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற ஐஸ்வர்யா ராய்க்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க, தொடர்ந்து பல படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

ஜீன்ஸ், கன்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் என அவ்வப்போது மட்டுமே தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டி வருகிறார் ஐஸ்வர்யா ராய். ஆனால், அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் மக்கள் மனதில் இடம்பிடிக்கிறது.
அமிதாப் பச்சனின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு ஆராத்யா எனும் மகள் உள்ளார். இவருக்கு தற்போது 13 வயது ஆகிறது. தனது தாயை போலவே இவரும் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விரைவில் ஜொலிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அபிஷேக் பச்சன் தனது மகள் ஆராத்யா சமூக ஊடகங்களிலும் இல்லாதது குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாதவனா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே! வைரல் போட்டோ
அபிஷேக் ஓபன் டாக்
“எங்கள் மகள் ஆராத்யா பச்சனிடம், என் தந்தை பெரும் நடிகர், என் மனைவி உலகப் புகழ்பெற்ற நடிகை என்றெல்லாம் ஒருபோதும் நான் பேசியதில்லை. ஆனால், அவள் இப்போது வளர்ந்து விட்டாள். எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாள் என்று நம்புகிறேன்.
எங்கள் மகள் ஆராத்யா எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை. அவளிடம் தொலைபேசியும் இல்லை. இதற்கான பெருமை முழுக்க முழுக்க என் மனைவி ஐஸ்வர்யா ராயை மட்டுமே சேரும். எங்கள் குழந்தை எங்கள் குடும்பத்தின் பெருமை, மகிழ்ச்சி. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.


