சிவக்குமார்
தமிழ் சினிமாவில் நிறைய பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்கி சாதித்து வருகிறார்கள்.
அப்படி நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க களமிறங்கியவர் சூர்யா, அவரை தொடர்ந்து சிவக்குமார் மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்தோடு கார்த்தி நடிக்க துவங்கினார்.
கார்த்தி, சூர்யா இருவருமே தங்களுக்கான ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவிட்டார்கள்.
கார்த்தியின் மகள்
நேற்று அதாவது ஏப்ரல் 18, நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்தது.
இதில் ரெட்ரோ படக்குழுவினரை தாண்டி சூர்யாவின் அப்பா, அம்மா, கார்த்தியின் மகள் உமையாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உமையாளை பார்த்த ரசிகர்கள் அட நம்ம கார்த்தியின் மகளா இவர் நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.