இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர்ஹிட்டான திரைப்படம் மதகஜராஜா. பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்த இப்படத்தை பல போராட்டங்களை கடந்த ரிலீஸ் செய்தனர். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது.

தோழிகளுடன் இலங்கைக்கு ட்ரிப் சென்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா.. புகைப்படங்கள் இதோ
பார்ட்டி
இதுபோலவே 8 ஆண்டுகள் கிடப்பில் போடவைக்கப்பட்டிருக்கும் திரைப்படம்தான் பார்ட்டி. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தில் மிர்ச்சி சிவா, ஜெய், ரெஜினா, ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ஜெயராம், சத்யராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
8 வருடங்களுக்கு முன்பே இப்படம் வெளிவரவிருந்த நிலையில், பண பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகவில்லை.
ரிலீஸ் எப்போது?
இந்த நிலையில், தற்போது பிரச்சனைகள் தீர்ந்து இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு வெளிவர அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறதா என்று.


