முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துடரும்: திரை விமர்சனம்

மோகன்லால், சோபனா, பாரதிராஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘துடரும்’ மலையாள திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.

கதைக்களம்  

மோகன்லால் பத்தினம்திட்டாவில் டேக்ஸி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கல்லூரிக்கு செல்லும் மகன், மகள் மற்றும் மனைவி என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.

ஒருநாள் தனது மாஸ்டர் இறந்துவிட்டதை அறிந்து தமிழ்நாட்டிற்கு செல்லும் மோகன்லால், ஊருக்கு திரும்பி வந்தபோது தனது டேக்ஸி போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்.

எஸ்.ஐ பென்னியிடம் அதுகுறித்து அவர் கேட்டபோது, கஞ்சா கடத்தல் காரில் நடத்திருப்பதாகவும் அதை செய்த இளைஞர் தப்பியோடிவிட்டதாகவும் கூறி, காரை கொடுக்க மறுக்கிறார்.

இதனால் விரக்தியடையும் மோகன்லால், அங்கேயே சுற்றி சுற்றி வர இன்ஸ்பெக்டர் ஜார்ஜை பார்த்து நடந்தவற்றை கூறுகிறார்.

பின்னர் அவர் கார் டேக்ஸியை கொடுத்து தங்களை சக போலீஸ் அதிகாரியின் திருமணத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறுகிறார்.

மோகன்லாலும் அவர்களுடன் செல்கிறார்.

அதன் பின்னர் மோகன்லால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் தப்பித்தாரா? போலீசுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை என்பதே மீதிக்கதை.

துடரும்: திரை விமர்சனம் | Actor Mohanlal Movie Review

பாவாடை தாவணியில் கலக்கும் நடிகை ரம்யா பாண்டியன்.. கண்கவரும் போட்டோஸ்

பாவாடை தாவணியில் கலக்கும் நடிகை ரம்யா பாண்டியன்.. கண்கவரும் போட்டோஸ்

படம் பற்றிய அலசல் 

பென்ஸ் என்கிற சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் அட்டகாசம் செய்துள்ளார்.

அப்பாவியான நபராகவே முதல் பாதி முழுவதும் நடித்திருக்கும் அவர், இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுப்பது கூஸ்பம்ப்ஸ் மொமெண்ட்.

படத்தின் தொடக்கத்தில் ரஜினி, கமல், மம்மூட்டி என முன்னணி நடிகர்களுடன் மோகன்லால் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் காட்டப்படுகின்றன.

அவற்றைப் பார்த்து சங்கீத் பிரதாப் இது என்ன படம் என்று கேட்க, விக்ரம் என்றதும் ஓ லோகேஷ் படமா என கேட்கும்போது மலையாள ஆடியன்ஸே கன்னெக்ட் ஆகி விசில் அடிக்கிறார்கள்.

துடரும்: திரை விமர்சனம் | Actor Mohanlal Movie Review

இதுபோல் மோகன்லாலின் மாஸ்டராக பாரதிராஜா, நண்பராக இளவரசு மற்றும் ஆங்காங்கே இளையராஜாவின் பாடல்கள் என தமிழ் ஆடியன்ஸும் ரசிக்க பல விஷயங்களை இயக்குநர் உள்ளே வைத்துள்ளார். அதற்கு அவர் காப்பிரைட்ஸ் கேட்காமல் இருந்தால் சரி.

மோகன்லாலின் மனைவியாக வரும் சோபனா குடும்பத்தலைவியாக சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு சீனில் அவர் முறைத்துப் பார்க்கும்போது மணிசித்ரதாழு கங்கா (சந்திரமுகி) எட்டிப்பார்க்கிறார்.

படத்தின் கதையைப் பார்க்கும்போது, ஒரு கொலை அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் என இரண்டாம் பாதியில் த்ரில்லர் படமாக மாறுகிறது.

மோகன்லாலின் மெகாஹிட் படமொன்றின் சாயலில் இருந்தாலும் ஆக்ஷ்ன் சீன்கள் வைத்து தெறிக்கவிட்டிருக்கிறார் இயக்குநர் தருண் மூர்த்தி.

இன்ஸ்பெக்டராக வரும் பிரகாஷ் வர்மா முதல் படத்திலேயே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். பினு பப்புவும் அவருக்கு போட்டியாக வில்லத்தனம் காட்டியுள்ளார்.

ட்விஸ்ட்டை கிளைமேக்ஸ் வரை யூகிக்க விடாமல் கொண்டு சென்றதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். படத்தின் முடிவில் தமிழின் டாப் ஹீரோ ஒருவரின் கேமியோ செம டச்.  

க்ளாப்ஸ் 

மோகன்லாலின் நடிப்பு மற்றும் சண்டைக்காட்சிகள்

கிளைமேக்ஸ் ட்விஸ்ட்

இரண்டாம் பாதி திரைக்கதை

மைனஸ்  

பல மலையாளப் படங்களில் பார்த்த த்ரில்லர் கதைதான்

மொத்தத்தில் ஃபேமிலியுடன் என்ஜாய் பண்ணி பார்க்கக்கூடிய படம்தான். மோகன்லாலின் வெற்றிப்பயணம் இந்தப்படத்தின் தலைப்பைப் போல் துடரும் (தொடரும்).   

ரேட்டிங்: 3.25/5

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.