வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
சிம்புவுடன் போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
28 – வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை மீனாட்சி சவுத்ரி சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா?
அதன்பின், தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், நேற்று வரலட்சுமி அவருடைய 40 – வது பிறந்தநாளை தனது கணவர் மற்றும் அம்மாவுடன் இணைந்து ஆதரவற்ற குழந்தைகள் இருக்கும், ஆசிரமத்தில் கொண்டாடி உள்ளார்.
தற்போது, இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.