அஜித் குமார்
நடிகர் அஜித் சமீபத்தில் குட் பேட் அக்லி என்ற ஒரு மாபெரும் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
நடிப்பை தாண்டி தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார் அதிலும் மாபெரும் வெற்றி அடைந்து வருகிறார். இதை தவிர்த்து சில தினங்களுக்கு முன் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது.


ரெட்ரோ பட ப்ரீ – ரிலீஸில் சர்ச்சை பேச்சு.. நடிகர் விஜய் தேவரகொண்டா கொடுத்த விளக்கம்
நெகிழ்ச்சி பதிவு
அஜித்குமார் பத்ம பூஷண் விருது பெற்ற நிகழ்ச்சியின்போது, அவரின் மகன் ஆத்விக்கை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கொஞ்சிய புகைப்படத்தை தற்போது அஜித் மனைவி ஷாலினி அவரது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த புகைப்படத்தின் கீழ், ‘பொக்கிஷமான தருணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram

