நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கையில் இந்திய கூட்டு நிறுவனங்களின் திட்டத்தை தனது அரசாங்கம் இரத்து செய்யும் என்ற ஒரு அறிவிப்பை தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இலங்கையில் இந்திய கூட்டு நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தியில் இருந்து யூனிட் ஒன்றுக்கு 0.0826 டொலர் என்ற விகிதத்தில் எரிசக்தியை வாங்குகிறது என்றும் அதேசமயம் இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு 0.0488 டொலர் மட்டுமே சக்தியை வழங்குகிறது என்றும் அவர் எடுத்துரைத்திருந்தார்.
தம்பவாணி என்ற பெயரில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காற்றாலை மின்உற்பத்தி நிலையம் மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு அறிக்கை அனண்மையில் தயாரிக்கப்பட்டது.
எனினும், இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுகின்ற பறவைகளின் மரணங்களின் எண்ணிக்கை, ஆய்வுகள் மூலம் மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக உள்ளதான குற்றச்சாட்டுக்கள் மேலேங்கியுள்ளன.
இந்த மின் உற்பத்தி நிலையத்தின் காற்றாலைகள், கரையோர பகுதிகளின் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும கருத்து தெரிவித்த அவர்,