முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரான்ஸ் சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள்

Courtesy: Sivaa Mayuri

இருதரப்பு கடனாளர்களான இந்தியா, சீனா மற்றும் பாரிஸ் கிளப் ஒஃப் நேசன்ஸ் ஆகியவற்றுடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் இலங்கை இன்று (26) கைச்சாத்திடும் போது, தனது நிலுவைக்கடன்களை தீர்ப்பதற்கான சலுகைக் காலத்தையும் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரிஸ் கிளப் ஒஃப் நேசன்ஸ், இந்தியா மற்றும் சீனாவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை இலங்கை நடத்தியதுடன், கடன்களைத் தீர்ப்பதற்கு சமமான நிபந்தனைகளில் அந்த தரப்புக்களுடன் இணக்கங்களையும் எட்டியுள்ளது.

வர்த்தகக் கடன்

அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி, 37 பில்லியன் டொலர் நிலுவையில் உள்ள வெளிநாட்டுக் கடனில் 28.5 சதவீதத்தை இருதரப்புக்  கடன்களாகும்.

பிரான்ஸ் சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் | Agreements Signed Debt Restructuring

இதில் 4.66 பில்லியன் டொலர்களைக் கொண்ட சீனா, மிகப்பெரிய ஒற்றை இருதரப்பு கடன் வழங்குநராக உள்ளது.

2.35 பில்லியன் டொலர்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும், 1.36 பில்லியன் டொலர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

வர்த்தகக் கடன்களை பொறுத்தவரையில், சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட 12.55 பில்லியன் டொலர்களும் சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலும் 2.18 பில்லியன் டொலர்களும் அடங்குகின்றன.

இந்தநிலையில், இலங்கை தனது கடன்களை மறுசீரமைப்பதில் சீனாவுடன் தனித்தனியாக முன்னெடுப்புக்களை மேற்கொண்டது

நிதியமைச்சின் பிரதிநிதிகள்

குறிப்பாக சீன எக்சிம் வங்கியுடன் இன்றைய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

எனினும் வணிகக் கடன்களை மறுசீரமைப்பதற்காக சீன மேம்பாட்டு வங்கியுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் | Agreements Signed Debt Restructuring

முன்னதாக, இருதரப்புக் கடனாளிகளுக்குக் கடனை செலுத்துவதை அரசாங்கம் 2028 வரை ஒத்திவைத்து, அதன் பின்னர் 2042 இல் முடிவடையும் காலப்பகுதியில் திருப்பிச் செலுத்துவதை முடிவுக்கு கொண்டு வர எதிர்பார்க்கிறது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

அத்துடன், கடன் மறுசீரமைப்பின் மூலம், இலங்கை தனது ஒட்டுமொத்த சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் இன்று இரு தரப்பு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக நிதியமைச்சின் பிரதிநிதிகள் குழுவொன்று பிரான்ஸ் சென்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத்தன்மைக்காக அனைத்து விபரங்களும் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.