ஐஸ்வர்யா ராய்
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய். பின் பாலிவுட் பக்கம் சென்ற இவருக்கு, அங்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் அவ்வப்போது தலைகாட்டி சென்றாலும், இவர் நடிக்கும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
வசூல் வேட்டையை முன்பதிவிலேயே ஆரம்பித்த குட் பேட் அக்லி.. மாஸ் காட்டும் அஜித்
வைரலாகும் வீடியோ
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் விபத்தில் சிக்கியுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் ஐஸ்வர்யா ராய்யின் சொகுசு காரின் மீது பேருந்து மோதியுள்ளது.
ஆனால், பெரிதாக சேதம் எதுவும் காருக்கு ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பின் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். அவர்கள் ஐஸ்வர்யா ராய் காரை அங்கிருந்து செல்ல அனுமதி கொடுத்தனர்.
இதோ அந்த வீடியோ…
View this post on Instagram