அமலாபால்
தமிழில் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் நடிகை அமலாபால்.
அப்பட வெற்றியால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா ஆகியோர் படங்களில் நடித்தார். தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குநர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார். அதற்கு பின், ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு இலை என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.
குடும்ப ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பெருசு திரைப்படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிந்து சமவெளி. இப்படத்தில் மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே தவறான உறவு ஏற்படுவது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கும். இதனால் இப்படம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
ரகசியம்
இந்நிலையில், 17 வயதில் இந்த படத்தில் நடித்ததன் மூலம் பட்ட கஷ்டங்கள் குறித்து அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” சிந்து சமவெளி படம் வெளிவந்த பின் பல துன்பங்களை நான் சந்தித்தேன். எனது குடும்பம் அடைந்த மனவேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
என்னை விட என் அப்பா தான் மிகவும் வருத்தப்பட்டார். இதனால் மைனா படத்தின் புரோமோஷன் விழாவிற்கு கூட போக முடியாமல் தவித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.