முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரிடம் ஆசி பெற்ற அநுர

நாட்டின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டுள்ளார்.

நாராஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் ராமண்ய பீடத்திற்கு இன்று (05) முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி
இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. மகுலேவே விமலநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுகொண்டுள்ளார்.

பொருளாதார  – அரசியல் நிலைமைகள்

அத்துடன், அநுநாயக்க தேரர்கள் மற்றும் பதிவாளர்கள் தலைமையிலான மகாசங்கத்தினர் இதன்போது கலந்துகொண்டிருந்ததோடு, அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கியுள்ளனர்.

ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரிடம் ஆசி பெற்ற அநுர | Anura Met Ramanna Maha Nayaka Thera

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி தற்போதைய பொருளாதார,  அரசியல் நிலைமைகள் குறித்து மகா சங்கத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, தூதுவர்களை நியமிக்கும்போது, கற்ற, அறிவார்ந்த, வெளிநாடுகளில் இந்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பொறுத்தமானவர்களை நியமிக்குமாறும், ஆளுநர்களை நியமிக்கும்போது அரசியல் நோக்கங்களுக்காக அன்றி பொறுப்பானவர்களை நியமிக்குமாறும் மகா சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரிடம் ஆசி பெற்ற அநுர | Anura Met Ramanna Maha Nayaka Thera

அதேபோல், அமைச்சுக்களின் செயலாளர் பதவிக்கும் பொறுத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டவாறு தீர்மானங்களை எடுப்பதே தமது நோக்கமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் உரிய மறுசீரமைப்புக்களை செய்ய எதிர்பார்த்திருப்பதாக கூறியுள்ளார்.

ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரிடம் ஆசி பெற்ற அநுர | Anura Met Ramanna Maha Nayaka Thera

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் மீது வைத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மகாசங்கத்தினர் ஆசி என்றும் ஜனாதிபதிக்கு கிட்டும் என வண. மகுலேவ விமலநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

Gallery

Source: https://ibctamil.com/article/anura-met-ramanna-maha-nayaka-thera-1728117867

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்