முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாதுகாப்பு கூட்டத்தை சிரிப்பில் மூழ்கடித்த அர்ச்சுனாவின் zoom பேச்சு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரைாயாட சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெனீவாவிலிருந்து ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பங்கேற்றுள்ளார்.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை உரையாடலில் ஈடுபடுத்தினார்.

அர்ச்சுனாவிற்கான அச்சுறுத்தல்கள்

அதனை தொடர்ந்து பேசத் தொடங்கிய அர்ச்சுனா,

“சபாநாயகரே, என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அது யாரிடமிருந்தும் இல்லை. இந்த அரசாங்கம், காவல்துறை மற்றும் சபாநாயகரால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது.”என்று சத்தமாக கூறியுள்ளார்.

பாதுகாப்பு கூட்டத்தை சிரிப்பில் மூழ்கடித்த அர்ச்சுனாவின் zoom பேச்சு! | Archchuna S Actions In Debate Of Security Of Mps 

அவரது பேச்சைக் கேட்டு முழு சபையும் சிரிப்பில் மூழ்க அதிக நேரம் எடுக்கவில்லை.

அந்த நேரத்தில் பேசிய சபாநாயகர், “மிஸ்டர் அர்ச்சுனா, என்னிடமிருந்து உங்களுக்கு என்ன அச்சுறுத்தல் இருக்கிறது? எனக்குத் தெரிந்தவரை, நான் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் செய்யவில்லை” என்று சிரித்துக் கொண்டே கேட்டுள்ளார்.

நிம்மதியடைந்த எம்பிக்கள்

அதற்கு பதில் அளித்த அர்ச்சுனா,

“சபாநாயகரே, நீங்கள்தான் எனக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். நான் சபையில் இருக்கும்போது நீங்கள் எப்போதும் என் மைக்கை அணைத்துவிடுவீர்கள். நீங்கள் என்னைப் பேச விடுவதில்லை. அதுதான் உங்களிடமிருந்து எனக்கு வரும் அச்சுறுத்தல்.

பாதுகாப்பு கூட்டத்தை சிரிப்பில் மூழ்கடித்த அர்ச்சுனாவின் zoom பேச்சு! | Archchuna S Actions In Debate Of Security Of Mps

அதனால்தான் நான் அதைச் சொல்ல ஜெனீவா வந்திருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு சொன்னதும், அனைவரும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு மீண்டும் சிரித்துள்ளனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் தீவிரமாகிக் கொண்டிருந்த நேரத்தில், அர்ச்சுனாவின் பேச்சு அனைவருக்கும் ஓரளவு நிம்மதியைத் தந்ததாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்