இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு இன்றையதினம் பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையை வைத்து ஒரு அரசியல் சூதாட்டம் இடம்பெற்றுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய அன்றே வீடு திரும்பக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது.
ஆனால், தற்போது சட்டத்தரணியாக உள்ள அரசியல்வாதி ஒருவர் வேண்டுமென்றே அவரை சிறையில் அடைப்பதற்காக அனைத்து தந்திரோபாயங்களையும் மேற்கொண்டுள்ளார்.
சட்டத்தரணியின் சதி
குறித்த நபருக்கு ஆதரவாக முன்னிலையாவதாக தெரிவித்த அந்த சட்டத்தரணி, அவர் சிறைக்கு செல்வதற்கான வேலைகளை மாத்திரம்தான் செய்துள்ளார்.
அவரை கைது செய்த புலனாய்வுத்துறையினரே அவரை விடுதலை செய்யலாம் என்று கூறினார்கள். ஆனால், அந்த சட்டத்தரணி அவரை சிறைக்கு அனுப்புவதிலேயே குறியாக செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் கருத்து தெரிவிக்கையில், நேரடியாக சட்டத்தரணி சுமந்திரன் சதி செய்ததாக குற்றச்சாட்டினார்.