அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் தொகையை வங்கிக் கணக்கின் ஊடாக பெற்றுக் கொள்வது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நாளை (27) முதல் உரிய வங்கிக் கணக்கின் ஊடாக பணத்தை பெற்று கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள்
குறித்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தகுதி பெற்ற 212,423 குடும்பங்களுக்கான நிலுவைத்தொகையான 1,314,007,750 இற்கு மேல் உள்ள தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தலைவர் ஜயந்த விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.