முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர்

உக்ரைன்(ukraine) போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவுடன்(russia) இணைந்துள்ள வட கொரிய(north korea) படையினரில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரிய தேசிய புலனாய்வு சேவையால் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லீ சுங்-க்வோன் மேலும் 1,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.

உயர்மட்ட அதிகாரிகளும் உயிரிழப்பு

உயிரிழந்தவர்களில் உயர்மட்ட அதிகாரிகளும் உள்ளடங்குவதாகவும், துருப்புக்களுக்கு நிலப்பரப்பு பற்றிய பரிச்சயம் இல்லாமை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் இல்லாமை காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர் | At Least 100 North Koreans Dead In Ukraine War

உக்ரைனில் வட கொரியாவின் உயிரிழப்புகள் பற்றிய முதல் அறிக்கை இந்த வார தொடக்கத்தில் வந்தது.

ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவ வடகொரியா கடந்த ஒக்டோபரில் 10,000 துருப்புக்களை அனுப்பியதாக தகவல் வெளியானது.

கடந்த சில மாதங்களாக வடகொரியாவுடனான உறவை ரஷ்யா வலுப்படுத்தி வருகிறது.

“பல நூற்றுக்கணக்கானவர்கள்” கொல்லப்பட்டனர் 

திங்களன்று அமெரிக்க பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உக்ரைன் போரில் வட கொரியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியபோதிலும் எண்ணிக்கையை வெளியிடவில்லை.எனினும் ஒரு நாள் கழித்து பெயரிட விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரி “பல நூற்றுக்கணக்கானவர்கள்” கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று கூறினார்.

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர் | At Least 100 North Koreans Dead In Ukraine War

வட கொரிய துருப்புக்கள், அவர்களில் எவருக்கும் எந்த முந்தைய போர் அனுபவமும் இல்லை, அவர்கள் முதல் வாரங்களை ரஷ்யாவில் பயிற்சியிலும் பின்னர் களத்திலும் கழித்ததாக நம்பப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த திடீர் ஊடுருவலின் போது உக்ரைனால் கைப்பற்றப்பட்ட ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky), குர்ஸ்க் மீதான தாக்குதல்களில் “கணிசமான எண்ணிக்கையிலான வட கொரியர்களை” ரஷ்யா பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.