முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் விக்ரமசிங்கவின் இதயத்தில் மூன்று அடைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழு, அவருக்கு பிணை பெறுவதற்காக தற்போது நீதிமன்றத்தில் பல குறிப்பிட்ட விடயங்களை முன்வைத்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இதயத்தில் உள்ள நான்கு முக்கிய தமனிகளில் மூன்று அடைப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, அந்த மருத்துவ நிலைமைகள் தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இதய திசு இறப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த பிணை அழைப்புக் கடிதம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமான வழக்கு முடியும் வரை பிணை வழங்க வேண்டாம் என்று அவர் கோரியுள்ளார்.

எனினும் ரணில் விக்கிரமசிங்க பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு உயிராபத்து உள்ளதென ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் தெரிவித்துளார்.

முதலாம் இணைப்பு 

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் விசாரணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் இதயத்தில் மூன்று அடைப்பு! | Attorney Generals Opposes Granting Bail To Ranil

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​குற்றப் புலனாய்வுத் பிரிவிலிருந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்னிலையாகியுள்ளார்.

சட்டத்தரணிகள் குழு முன்னிலை

சந்தேகநபரான ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன மற்றும் அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்னிலையானது.

ரணில் விக்ரமசிங்கவின் இதயத்தில் மூன்று அடைப்பு! | Attorney Generals Opposes Granting Bail To Ranil

இருப்பினும், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்த்துள்ளது. 

இதற்கிடையில், அழைப்புப் பத்திரத்தின் சட்டப்பூர்வ தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று மேலதிக சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.