முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு பாலர் பாடசாலை விவகாரம்.. பொதுமக்கள் கடும் கண்டனம்

மட்டக்களப்பு – பனியர் வீதியில் அமைந்துள்ள மட்டு. ரோட்டரி கழக கட்டிடத்தில் சமூக
சீரழிவு இடம்பெறுவதாகவும் அதை பொதுமக்களுக்கு அசௌரியம் கொடுக்காமல்
செயற்படுமாறு அறிவித்துவிட்டு அதற்கு அருகில் இயங்கிவரும் மதர் கெயார் பாலர்
பாடசாலையை அங்கிருந்து வெளியேறுமாறு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

எனவே
இவர் சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கின்றாரா? பிள்ளைகளின் கல்வியை அழிக்கின்றாரா?
என பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் வீதிக்கு ஒதுக்கப்பட்ட காணி ( (Reservation) காணியில்
கடந்த 2000ம் ஆண்டு சட்டவிரோதமாக அப்போது அரச திணைக்கள தலைவர்களால் இந்த
கட்டிடங்களை அமைத்துள்ளனர் இந்த கட்டிடங்கள் மாநகரசபை தனக்கு சொந்தமானது என
அதற்கான கட்டிட குத்தகை பணத்தை ரோட்டரி கழகம் மாநகரசபைக்கு செலுத்தி
வந்துள்ளது.

ஒதுக்கப்பட்ட காணி

இந்த நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் அண்மையில் பொறுப்பேற்ற பிரதேச
செயலாளர் இந்த ரோட்டரி கழகம் மற்றும் பாலர் பாடசாலை அமைந்துள்ள காணி அரச காணி
என கண்டுபிடித்து இது மாநகரசபைக்கு சொந்தம் அல்ல பிரதேச செயலகத்துக்கு சொந்தம்
எனவே இனிவரும் காலங்களில் அதற்கான குத்தகை பணத்தை பிரதேச செயலகத்துக்கு
செலுத்துமாறு ரோட்டரி கழகத்துக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு பாலர் பாடசாலை விவகாரம்.. பொதுமக்கள் கடும் கண்டனம் | Batticaloa Preschool Issue

இவ்வாறான நிலையில் இயங்கிவரும் பாலர் பாடசாலை காணி மட்டக்களப்பு ஆணையாளர்
மற்றும் ரோட்டரி கழகம் தலைவருக்கும் இடையே 15-6-2002, மற்றும் 01-3-2006
ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகள் 01-5-2006 முதல் செல்லுபடியற்றதாக
மட்டக்களப்பு ஆணையாளர் ரோட்டரி கழக தலைவருக்கு கடித மூலம்
அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மதர் கெயார் பாலர் பாடசாலை கட்டிடம் அமைந்துள்ள காணி அரச காணி எனவே
குறித்த காணியில் இருந்து 15-8-2025 திகதி முன்னர் வெளியேறி கிராம
உத்தியோகத்தரிடம் ஒப்படைக்குமாறு அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என
பிரதேச செயலாளர் கடித மூலம் பாலர் பாடசாலை தலைமை ஆசிரியருக்கு
அறிவித்துள்ளார்.

மக்கள் கோரிக்கை 

இவ்வாறான நிலையில் குறித்த ரோட்டரி கழக கட்டிடத்தில் சமூக சீர்கேடு
இடம்பெற்று வருவதாகவும் இதனால் தாம் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக
பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் எனவே பொதுமக்களுக்கு அசௌகரியங்கள்
ஏற்படாத வண்ணம் செயற்படுவது அனைவரது கடமை இது தொடர்பாக அவதானம் செலுத்துமாறும்
ரோட்டரி கழக தலைவருக்கு பிரதேச செயலாளர் எழுத்து மூலமாக அறிவித்ததுடன் இது
தொடர்பாக கோட்டைமுனை கிராம உத்தியோகத்தர் மற்றும் போதை பொருள் முற்தடுப்பு
உத்தியோகத்தர்கள் கண்காணிக்குமாறு அந்த கடிதத்தில் பிரதியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பாலர் பாடசாலை விவகாரம்.. பொதுமக்கள் கடும் கண்டனம் | Batticaloa Preschool Issue

எனவே சமூக சீர்கேடு இடம்பெற்றுவரும் அதாவது மதுபானம் பாவிப்பதற்கான இடமாக
இருக்கும், ரோட்டரி கழகத்தை வெளியேற்றாமல் மாணவர்கள் கல்வி கற்று வரும்
பாலர் பாடசாலை வெளியேற்றுகிறார் என்றால் அவரது செயல்பாடு சமூக சீர்கேட்டை
ஊக்குவிப்பதாக தோன்றுகின்றது எனவே பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்
அழிக்கும் இவரது இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டித்துள்ளனர்.

எனவே இது தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி
கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் குறித்த பகுதி மட்டு ஒல்லாந்தர் கோட்டையில்
இருந்து பயனியர் வீதி, பார் வீதி ஊடாக சீலாமுனை வரைக்கும் சுமார் 4
கிலோமீட்டர் தூரம் முகத்துவாரம் வரை கோட்டையில் இருந்து கடல் தெரியும்
வரைக்கும் ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் வீதிக்கு என ஒதுக்கப்பட்ட (
Reservation) காணியில் சில இடங்களில் சட்டவிரோதமாக அனுமதியின்றி அரச
திணைக்கள அதிகாரிகள் மற்றும் சில பணக்காரர்கள் ஆட்சி அதிகாரங்கள் ஊடாக
சட்டவிரோத கட்டிடங்களை கட்டி அரச சொத்தை அபகரித்து உள்ளனர்.

சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் அரச அதிகாரிகள் பணம் படைத்தவர்களுக்கு ஒரு
சட்டமா? சட்டம் எல்லோருக்கும் சமம் எனில் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு
எதிராக அரச சொத்தை மோசடியாக அபகரித்த குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.