அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் உரையாற்றிய வசந்த சமரசிங்க, “ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எந்தவொரு அரசாங்க வீட்டையும் பயன்படுத்துவதில்லை.
அமைச்சு சலுகைகள்
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை ஒப்படைத்துள்ளார்கள், எங்கள் அமைச்சர்கள் யாரும் வீடுகள் கேட்கவில்லை, உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது தங்குவதற்கு மாதிவெல குடியிருப்பு வளாகத்தில் வீடு வழங்கப்படுகிறது.
அமைச்சராக எனக்கு மூன்று வி8 வாகனங்கள் கிடைக்கின்றன. ஆனால் நான் அவற்றில் எதையும் பயன்படுத்துவதில்லை.
சம்பளம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரித்துடைய ஒன்று, ஆனால் ஓய்வூதியம் கண்டிப்பாக ஒழிக்கப்படும்” என்றார்.