ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரானின் (Iran) அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா இன்று (22.06.2025) அதிகாலை தாக்குதலை நடத்தியிருக்கிறது.
ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் என மூன்று அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்கியுள்ளது.
பாதுகாப்புக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல்
தாக்குதல் முழு வெற்றியை கொடுத்திருக்கிறது என்றும், அணு சக்தி மையங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக International Atomic Energy Agency உறுதிப்படுத்தி உள்ளது,
இவ்வாறான பதற்ற சூழ்நிலையில், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் ஈரானின் அணுசக்தி திட்டம் “சர்வதேச பாதுகாப்புக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் என பிரித்தானிய பிரதமர் விவரித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது, என்பதோடு அந்த அச்சுறுத்தலைத் தணிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

