இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து துறைக்கும் நல்ல சம்பள அதிகரிப்பை வழங்க எதிர்பார்ப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கங்களைப் போலல்லாமல், தொடர்புடைய சம்பள உயர்வு அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் சம்பளம்
இந்த நாட்டில் முதல்முறையாக அரசியல்வாதிகளின் சம்பளம் குறைக்கப்பட்டு, மக்களின் வளர்ச்சிக்கு பட்ஜெட் பயன்படுத்தப்படும் என்றும் அவர் சட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தனது அரசாங்கம் ஒரு நல்ல பட்ஜெட்டை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.