பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது, திருகோணமலை – கந்தளாய் மணிக்கூண்டு அருகே இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.
பேருந்து ஓட்டிச் சென்ற சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளதுடன், அதன் காரணமாகவே விபத்து நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், விபத்து காரணமாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கடையின் முன்பக்க கூரை சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

