எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த பிரசார கூட்டம், கீரிமலை
பகுதியில் நேற்றையதினம்
(26.08.2024) நடைபெற்றுள்ளது.
காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்குட்பட்ட கீரிமலை கூவில் சிவானந்தா விளையாட்டு
கழக மைதானத்தில் நேற்று இரவு 7 மணியளவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா
மகேஸ்வரனின் பங்கேற்புடன் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
கட்சியின் பிரதிநிதிகள்
பிரசார கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள், இளைஞர்கள்,
யுவதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.