கனடாவில் (Canada) நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகி மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை
இதேவேளை கனடா – டொரொன்டோவில் சில முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொரொன்டோவில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில சுற்றுலா தளங்களை இன்றையதினம் (16.02.2025) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டொரொன்டோ உயிரியல் பூங்கா (Toronto Zoo) இன்றைய தினம் (Sunday)மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.