முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறை வாசத்திற்கு தயாராகும் மகிந்தவின் சகோதரர்: கசிந்தது அரச தரப்பு தகவல்

மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் சக்திவாய்ந்த அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa), அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 9, 2022 அன்று நடந்த போராட்டத்தின் போது திஸ்ஸமஹாராமாவின் உள்ள தனது வீடு மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக போலியான தகவலை அளித்து அரசாங்கத்திடமிருந்து மோசடியாக பணம் பெற்ற குற்றச்சாட்டில் இந்த கைது மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்போது சமல் ராஜபக்ச, சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சத்து இருபத்திரெண்டாயிரத்து அறுநூறு ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வேறொருவரின் பெயரில் சொத்து

இதன்படி, இது தொடர்பான விசாரணையை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, திஸ்ஸமஹாராமாவின் உள்ள சொத்து சமல் ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல என்பதும் மாறாக வேறொருவரின் பெயரில் உள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளதுடன், அங்கு வீடு இல்லை என்றும் அங்கு ஒரு நெல் கிடங்கு மட்டுமே இருந்தது என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிறை வாசத்திற்கு தயாராகும் மகிந்தவின் சகோதரர்: கசிந்தது அரச தரப்பு தகவல் | Chamal Rajapaksa To Be Arrested In Few Days

சமல் ராஜபக்ச, சம்பந்தப்பட்ட சொத்தை தனது வசம் வைத்திருப்பதாகக் கூறி ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அங்கு ஒரு நெல் கிடங்கு மட்டுமே இருந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சொத்து சமல் ராஜபக்சவுக்குச் சொந்தமானது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, 27.7.2023 அன்று, பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர், மேற்படி அமைச்சின் கையொப்பத்தின் கீழ், இழப்பீட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு, அவரது மேற்பார்வையின் கீழ் தொடர்புடைய இழப்பீட்டை வழங்க முடியாது என்று அறிவித்துள்ளார்.

மோசடி நடந்த விதம்

எனினும், 20.07.2023 அன்று, மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீட்டாளர் ஒருவர், அங்கு ஒரு வீடு இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ. 1,48,00,00 என்றும் கூறி ஒரு மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

சிறை வாசத்திற்கு தயாராகும் மகிந்தவின் சகோதரர்: கசிந்தது அரச தரப்பு தகவல் | Chamal Rajapaksa To Be Arrested In Few Days

அதன்படி, நெல் கிடங்கிற்கு ஏற்பட்ட சேதம் ரூ. 222,600 மற்றும் இல்லாத வீட்டிற்கு ரூ. 1,48,00,00 என அரசாங்கத்திடமிருந்து சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சத்து இருபத்திரெண்டாயிரத்து அறுநூறு ரூபாய் மோசடியாக சமல் ராஜபக்ச பெற்றுள்ளார்.

மேலும், இந்தப் பணத்தை செலுத்துவதற்கு சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு மாறாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது வரும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

https://www.youtube.com/embed/soC6XVznZ9Y

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.