வட மாகாணத்தில் வைத்தியத்துறை மாபியாக்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை தமிழ் அரசியல்வாதிகள் நலிவடையச் செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) இடம்பெற்ற பல்வேறு மோசடிகளை வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் (Archchuna Ramanathan) அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் காரணமாக கோபமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அது வைத்திய மாபியாக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருந்தது.
களமிறங்கியுள்ள வைத்தியர்
இதேவேளை திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய வைத்தியர் அர்ச்சுனா களமிறக்கப்பட்டதாக சில தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அது எவ்வாறாக இருந்தாலும், வைத்தியரால் வெளிப்படுத்தப்பட்ட மோசடிகள், அரசியல்வாதிகளின் ஆதரவுடன் செயற்படும் வைத்திய மாபியா கும்பல்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
வைத்தியர்களால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் கொதிந்தெழுந்து இந்த மோசடிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்டம்
கடந்த சில வாரங்களாக இது குறித்து பல்வேறு வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டாலும், தற்போது மக்கள் போராட்டம் முழுமையாக தோல்வி அடைந்த ஒன்றாகவே மாறியுள்ளது.
இதற்கு வட மாகாண அரசியல்வாதிகளே காரணம் என உண்மைகளை வெளிப்படுத்திய வைத்தியர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/EwNU2QUYrwo?start=13