முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னை விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

தேங்காய் விலை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தென்னை பயிர்ச்செய்கை சபை (Coconut Cultivation Board) தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (Department of Government Information) இன்று (10.03.2025) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வட்டி விகிதத்தில் கடன்

அதன்படி, அந்த விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தேவையான தென்னை நாற்றுகளை வழங்குதல், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குதல், வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னை நாற்றுகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் இதற்காகத் தொடங்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

தென்னை விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Coconut Price In Sri Lanka Decline Coconut

இதேவேளை, இலங்கையில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு மற்றும் தேங்காய் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக, நாட்டில் தினசரி தேங்காய் நுகர்வு 2 மில்லியன் தேங்காய்களால் குறைவடைந்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.

நாட்டில் தினசரி தேங்காய் நுகர்வு 5 மில்லியன் தேங்காய்களாக இருந்தாலும், தற்போதைய நிலைமை காரணமாக, தினசரி தேங்காய் நுகர்வு 3 மில்லியனாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் 60 முதல் 65 மில்லியன் தென்னை மரங்கள் இருப்பதாகவும், அவற்றிலிருந்து ஆண்டுதோறும் கிடைக்கும் தேங்காய் சாகுபடி 3,000 மில்லியன் தேங்காய்களுக்கு மேல் இருப்பதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.