முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்கள் வங்கியிடமிருந்து இழப்பீடு! காப்புறுதி வைப்பாளர்கள் குறித்து மத்திய வங்கியின் சிறப்பு அறிவிப்பு

நேஷன் லங்கா ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நடவடிக்கை நாளை (01.08.2026) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த இழப்பீட்டுத் தொகைகள், தெரிவு செய்யப்பட்ட மக்கள் வங்கி கிளைகள் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேஷன் லங்கா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதி வணிக உரிமம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த இழப்பீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக 11 இலட்சம்

இலங்கை வைப்புத் தொகை காப்புறுதி திட்டத்தின் கீழ் தகுதி பெறும் வைப்பாளர்களுக்கு, அவர்களின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்புத் தொகையின் மொத்த மதிப்பின் அடிப்படையில் அதிகபட்சமாக 11 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வங்கியிடமிருந்து இழப்பீடு! காப்புறுதி வைப்பாளர்கள் குறித்து மத்திய வங்கியின் சிறப்பு அறிவிப்பு | Compensation From People S Bank

இழப்பீட்டுத் தொகை, ஏற்கனவே உள்ள மக்கள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவோ, புதிதாகத் திறக்கப்படும் கணக்குகள் ஊடாகவோ அல்லது வங்கி Counters மூலம் பணமாகவோ வழங்கப்படும்.

2023 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க வங்கிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 66(2) ஆம் பிரிவின் கீழ், 2026 ஜூலை 3 ஆம் தேதி முதல் நேஷன் லங்கா ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் நிதி வணிக உரிமத்தை மத்திய வங்கி இரத்து செய்திருந்தது.

மேலும், காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்கள் மற்றும் சட்டபூர்வ உரிமையாளர்கள் 2032 ஜூலை 2 ஆம் தேதி வரை இழப்பீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மக்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பதுடன், நேஷன் லங்கா ஃபைனான்ஸ் நிறுவனத்தில் மொத்த வைப்புத் தொகை 5,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ள வைப்பாளர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களையும் தேவையான ஆவணங்களையும் மின்னணு முறையில் மக்கள் வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்

மற்ற காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் அசல் வைப்புச் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை மக்கள் வங்கியின் நியமிக்கப்பட்ட கிளைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மக்கள் வங்கியிடமிருந்து இழப்பீடு! காப்புறுதி வைப்பாளர்கள் குறித்து மத்திய வங்கியின் சிறப்பு அறிவிப்பு | Compensation From People S Bank

கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருப்போர் தனித்தனியாக இழப்பீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நேரில் வர இயலாத வைப்பாளர்கள், சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அதிகாரப்பத்திர (Power of Attorney) பிரதிநிதிகள் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டு வழங்கும் நடைமுறை தொடர்பான விண்ணப்பப் படிவங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் மத்திய வங்கியின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.

அதேபோல், மக்கள் வங்கியின் நியமிக்கப்பட்ட கிளைகளிலும் அச்சுப் பிரதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் தகவல்கள் தேவைப்படும் வைப்பாளர்கள், இலங்கை மத்திய வங்கியின் வைப்புத் தொகை காப்புறுதி மற்றும் தீர்வுகள் திணைக்களம் (Deposit Insurance and Resolution Department) ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Source: https://ibctamil.com/article/compensation-from-people-s-bank-1785489289

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.