கனடாவுக்கும்(Canada) கிரீன்லாந்துக்கும்(Greenland) இடையே சிறிய கண்டமொன்று இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
கிரீன்லாந்தின் மேற்கு கடற்கரையில் உள்ள கடலில் சுமார் 400 கிமீ நீளமுள்ள கண்ட மேலோட்டத்தின் 19-24-கிலோமீட்டர் தடிமன் கொண்ட பகுதியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்று அழைக்கப்படுகிறது.
சிறிய கண்டம்
கனடாவிற்கும் கிரீன்லாந்திற்கும் இடையிலான ஆரம்ப பிளவு சுமார் 118 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமாகியுள்ளது.
சுமார் 58 முதல் 49 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கனடாவிற்கும் கிரீன்லாந்திற்கும் இடையில் பரவியிருந்த கடற்பரப்பு வடகிழக்கு-தென்மேற்கிலிருந்து வடக்கு-தெற்காக மாறியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது இந்த புதிய கண்டத்தை முதன்முறையாக உப்சாலா பல்கலைக்கழகம் (Sweden) மற்றும் டெர்பி பல்கலைக்கழகம் (UK) ஆகியவற்றின் புவியியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
6 கோடி ஆண்டுகளுக்கு முன்
இங்குள்ள டெக்டோனிக் தட்டு அசைவுகளை விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து கொண்டிருந்த போது, இந்த பகுதியில் 402 கி.மீ நீளம் கொண்ட சிறிய கண்டம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த கண்டம் சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.