முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஓய்வு பெறும் வேகப்புயல் : கௌரவித்த இங்கிலாந்து அணி : வைரலாகும் காணொளி

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன்(james anderson) மேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

நேற்று (ஜூலை 10) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

சச்சின் டெண்டுல்கருக்கு(sachin dendulkar) பிறகு அதிக சர்வதேச டெஸ்ட் போட்டியில் (188) விளையாடிய வீரர் என்ற பெருமை பெற்ற அண்டர்சன், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் (700) என்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

ஓய்வுபெற வேண்டிய நாள் 

முன்னதாக ஓய்வு குறித்துப் பேசிய அண்டர்சன், “நான் இன்னமும் நல்ல உடல்தகுதியுடன் எப்போதும் போலவே பந்துவீசுகிறேன். நான் இன்னமும் விளையாட முடியுமென நினைக்கிறேன். ஆனால், எனக்கு ஓய்வுபெற வேண்டிய நாள் ஒன்று வருமென்பதையும் அறிவேன். அதனால் அந்த முடிவை தற்போதே ஏற்றுக்கொள்கிறேன்.

இதைச் சொல்லுவதற்கு கடினமாக இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை.

ஓய்வு பெறும் வேகப்புயல் : கௌரவித்த இங்கிலாந்து அணி : வைரலாகும் காணொளி | Cricket Retiring James Anderson

கடைசி வாரம் கவுன்டி கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகள் எடுத்தேன். இன்னமும் என்னால் நன்றாக பந்துவீச முடிகிறது. தற்போது அழுவதைவிட நன்றாக விளையாடி போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து அணியின் கௌரவிப்பு

இந்த நிலையில், அண்டசர்னுக்கு இது கடைசிப் போட்டி என்பதால் அவரை மரியாதையுடன் நடத்த இங்கிலாந்து அணி முடிவு செய்தது.

இதையடுத்து அவருக்கு நேற்றைய போட்டியில் தேசிய கீதம் பாடுவதற்காக மைதானத்திற்குள் முதல் வீரராக சென்றார். மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து கரகோஷம் எழுப்பினர். மேலும் ஜேம்ஸ் அண்டர்சனின் குடும்பத்தினர் போட்டிக்கான பெல் மணியை அடித்தனர். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.