அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
தமிழ் மக்களின் இந்த தீர்ப்பை இன்றுவரை தமிழ் அரசியல் தலைமைகளால் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் அரசியல் அரங்கில் அடித்தாடிக்கொண்டிருந்தவர்களை துரத்தியடித்துள்ளார்கள்.
தமிழ் தேசிய மூடியை அணிந்து தமிழ் மக்களை ஏமாற்றி அரசாங்கங்களினதும், பல தூதரங்களிலினதும் முகவர்களாக வலம் வந்த கட்சிகள் அத்தனையையும் துடைத்தெறிந்த தமது கோபத்தை வாக்குகளினூடாக கொட்டி தீர்த்துள்ளார்கள்.
தமிழ் மக்களின் சொத்தாக இருந்த தமிழரசுக்கட்சி இதற்கு பின்னராவது திருந்துவார்களா என்று பார்த்தால் தேர்தலில் மக்ளகள் ஒதுக்கிய ஒருவரையே தேசிய பட்டியலில் நாாளுமன்றம் அனுப்பி மக்கள் ஆணையை மீண்டும் புறந்தள்ளுகின்றது.
வைத்தியர் அர்ச்சுனாவின் வெற்றியை பார்த்தாவது இவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும்.
சர்ச்சைக்குரிய வேட்பாளரான அவரை அதிக வாக்குகளை வழங்கி வெல்ல வைத்து தமிழ் மக்கள் அழகு பார்த்தார்கள்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வைத்தியர் அர்ச்சுனா பெற்ற வெற்றிகள் பற்றிய ஆச்சரியம் கலந்த பேச்சுக்கள், பலர் மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் தேசியத்தையோ தமிழ் மக்களை பற்றியோ பேசாத அவரை தமிழ் மக்கள் நாடாளுமன்றம் அனுப்பியதற்கு ஒரே ஒரு காரணம் அவர் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசியதாகும்.
இந்த விடயங்கள் தொடர்பாக அலசி ஆராய்கின்றது இன்றைய
உண்மையின் தரிசனம்…
https://www.youtube.com/embed/03ZJKGpJDsA