பெரும்போகத்துக்கான உர மானியத்தின் முதற்கட்டம் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி, 678.06 மில்லியன் ரூபாய் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உரமானியத்தின் கீழ், விவசாயிகளுக்கு முதல் கட்டமாக 15, 000 ரூபாயும், 2ம் கட்டமாக 10, 000 ரூபாவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உர மானியப் பணம்
அதன் அடிப்படையில், மொத்தமாக 25, 000 ரூபாய் வழங்கப்படும் என கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.